Tamil Poems !!

எல்லாம் சிவமையம் !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அணுவில் இருக்கும் ஆண்டவனே சிவனே
அருள்வடிவாகிய சுந்தரனே
மூர்த்திகள் மூவரில் மூத்தவனே சிவனே
மூன்றுகண்கள் கொண்ட ஈசனே
காரிருள் ஒழிக்கும் பேரொளியே சிவனே
ஜோதியாகிய தூயவனே
என்னை படைத்திட்ட இறைவனே பெரியவனே
பேதையாகிய நான் வாழ்க்கை கடலில் வழியறியாது தத்தளிகின்றேன்
சுற்றிலும் அசுரர் கூட்டம்
தூய நெஞ்சுடன் அனுதினமும் கோடி முறை உன்னை துதிக்கிறேன்
என்னை காத்திட வருவாய் வேதநாயகனே
நம்பிக்கை கோல் ஊன்றி இந்த நரகத்தில் காத்திருகின்றேன் நான்
நீ வருவாய் என...
வாழ்க்கை
~~~~~~~~~~~~~~~~

வாழ்க்கை அறியவும் இல்லை புரியவும் இல்லை
அறிந்தபின் தான் புரிந்தது புரியாததே மேலென்று !!!

கனவுகள்
~~~~~~~~
இமைகளிலே என் இமைகளிலே நான் கனவுகள் விதைத்தேனே
ரகசியமாய் நீருற்றி வளர்த்தேனே !
விழியிலே என் விழியிலே கனவுகள் ஆயிரம் முளைத்தென
கனவு சிறகுகள் நொடியில் சருகுகள் ஆயின !
ஏனோ இந்த சாபங்கள், என் நெஞ்சிலோ ஆறாத காயங்கள்!
இனி தீ வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
விதி கண்ணாம்பூச்சி விளையாட நான் என்ன பொம்மையா?

காதல்
~~~~~~

நேற்று...
தீயில் உருகினேன், காதல் தீயில் உருகினேன்
கல்லாக உருகி கிடந்த என் காதலியின் இதயத்தை கரைக்க!
இன்று
தீயில் கருகினேன், காதல் தீயில் கருகினேன்
கள்வன் எவனோ எனக்கு முன்பே காதலியின் இதயத்தை களவாடி போய்விட்டான் என்பதை நினைக்க!

No comments: